இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (21ம் தேதி) நடக்கிறது. இது குறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று(21ம் தேதி) காலை 11 மணியளவில், தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகிக்கிறார். இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : meeting ,
× RELATED விவசாயிகள் குறை தீர் கூட்டம்