×

தர்மபுரி அருகே சம்பங்கி பூ கிழங்கு தரம் பிரிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி, ஜூன் 21:  தர்மபுரி அருகே முத்துக்கவுண்டன் கொட்டாயில், சம்பங்கி பூ கிழங்கு தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, செவ்வந்தி, பட்டன்ரோஸ், அரளி, குண்டு மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் பயிரிடப்படுகின்றன. கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு பயன்படுத்தும் மாலைகளில் முக்கிய இடம் பெறுவதால், சம்பங்கி பூவிற்கு எப்போதும் கிராக்கி அதிகமாக இருக்கும்.

தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம், தர்மபுரி, நல்லம்பள்ளி தாலுகாக்களில்  சம்பங்கி பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தர்மபுரி அருகே முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியில், சம்பங்கி பூ கிழங்குகள் தரம் பிரிக்கும் பணியில், சுமார் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு தரம் பிரிக்கப்படும் சம்பங்கி பூ, கிழங்குகள் கிலோ ₹40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Dharmapuri ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்