×

தர்மபுரி பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி அதிகரிப்பு

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் இல்லாததால், மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. இருந்த போதிலும், தமிழகத்திலேயே தர்மபுரி மாவட்டம் தான் தக்காளி, வெண்டை, கத்திரி, பூசணி, பப்பாளி, குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் விளைவிப்பதில் முதலிடம் வகிக்கிறது. மாவட்டத்தில் தர்மபுரி, கம்பைநல்லூர், இண்டூர், பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது.

ஆண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைப்பதால், இப்பகுதி விவசாயிகள் வெண்டைக்காய் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கோடை மழை பெய்து வருவதால், தர்மபுரி அருகே செட்டிக்கரை நீலாபுரம், அரியகுளம், பெரியாம்பட்டி, காரிமங்கலம், இண்டூர் ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி அதிகரித்துள்ளது. தற்போது, ெவண்டைக்காய் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

Tags : Dharmapuri ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்