விஜய் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கல்

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், விஜய்யின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆலோசனை கூட்டம் மற்றும் தர்மபுரி மாவட்ட தலைமையின் 25ம் ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சி தர்மபுரியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகாந்த் வரவேற்றார். ஒன்றிய தலைவர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் தாபா சிவா தலைமை வகித்து, 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், முதியோர் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக காய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து கிராம மக்களுக்கும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கிராமங்கள் தோறும் குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நகர தலைவர் பெருமாள், குமார், ரஞ்சித், ராஜா, சக்பால், அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : birthday ,Vijay ,
× RELATED மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்