தாந்தோணிமலையில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

கரூர், ஜூன் 21: குடும்பத் தகராறு காரணாமக பஸ் பாடி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் வடிவேல்(23). பஸ் பாடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குடும்பத் தகராறு காரணமாக சில மாதங்களாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த வடிவேல், கடந்த 18ம்தேதி இரவு, வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Thanthonimalai ,
× RELATED வாலிபர் உள்பட 2பேர் தற்கொலை