×

அருகம்பாளையத்தில் சாக்கடை வடிகாலை சீரமைக்க வேண்டும்

கரூர், ஜூன் 21: கரூர் அருகம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை வடிகாலை மறுசீரமைத்து தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் காதப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அருகம்பாளையம் பகுதியில் இருந்து செம்மலர் நகர் வரை ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் நலன் கருதி, கடந்த 2014ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த சாக்கடை வடிகால் அமைக்கும் பணி பல பகுதிகளில் மேடாகவும், சில இடங்களில் தாழ்வாகவும் அமைக்கப்பட்டதால்தான், மழைநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கியிருந்து பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாக இந்த பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சாக்கடை வடிகால் சரியாக அமைக்காத நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் இந்த பகுதி மக்கள், இதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை வடிகாலை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பார்வையிட்டு தேவையான சீரமைப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : neighborhood ,
× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...