பொதுமக்கள் கோரிக்கை இனாம்கரூர் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம்

கரூர், ஜூன் 21: கரூர் நகராட்சி இனாம்கரூர் கிளை நூலகத்துக்கு வந்து செல்லும் வாசகர்களின் நலன் கருதி, கூடுதல் கிளை நூலகம் கட்டும் பணி துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட இனாம்கரூர் பகுதியில் கிளை நூலகம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான வாசகர்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். அதிகளவு வாசகர்கள் வந்து செல்லும் இந்த நூலக கட்டிடம் ஒரே கட்டிட வளாகத்தில் குறுகிய இடத்தில் உள்ளதால், வாசகர்கள் வந்து படித்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நூலக அலுவலர்களின், அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, ரூ. 10லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கியதோடு, பூமி பூஜையும் நடத்தப்பட்டது. இதனடிப்படையில், தேர்தல்கள் முடிந்து ஒரு மாதம் ஆகிய நிலையில், கடந்த சில நாட்களாக கிளை நூலகத்தின் முன்புறம் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான முதற் கட்ட பணிகள் துவங்கியுள்ளதால் பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

Tags : Public Building Extra Building ,Inamcarur Branch Library ,
× RELATED கல்வியை காவிமயமாக்க மத்திய பாஜ அரசு திட்டம்