×

அரவக்குறிச்சி பகுதியில் மக்களை மிரட்டும் அதிவேக வாகனங்கள் அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, ஜூன் 21: அரவக்குறிச்சி பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியில் முக்கிய சாலைகளாக கரூர் சாலை, சின்னத்தாராபுரம் சாலை, கடை வீதி, பள்ளபட்டி சாலை, புங்கம்பாடி சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாகத் தான் அரவக்குறிச்சிக்கு வரவேண்டும்.

தினமும் இந்த சாலைகளில் பள்ளி வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் திண்டுக்கல், கரூர், பழனி, பொள்ளாச்சி, உடுமலை, கோவை என்று பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன். இந்நிலையில் இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக செல்கின்றன.

குறிப்பாக லாரிகள், கார்கள், சில பள்ளி வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக செல்லுகின்றன. அதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். சாலை பாதுகாப்பு விதிகளின்படி தேசிய சாலைகளில் 70 கிமீ, மாநில சாலைகளில் 60 கிமீ, நகர்புறச் சாலைகளில் 45 கிமீ வேகத்திலும் செல்ல வேண்டும். இந்த சாலை விதிகளை கடைபிடிக்காமல் நகர்புறங்களிலேயே ஹாரணை அலர விட்டுக் கொண்டு அதிவேகமா செல்லுகின்றன.

இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் பதற்றமடைய வேண்டிய சூல்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலான வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவியும் இல்லை. இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரவக்குறிச்சி பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Aravakurichi ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...