குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் பஞ்சபிரகார விழா

குளித்தலை, ஜூன் 21: கரூர் மாவட்டம், குளித்தலை மகாமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி, குளித்தலை தாலுகா மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் சார்பில் 27ம் ஆண்டு பஞ்சப்பிரகார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி முதல் நாள் உற்சவ மாரியம்மன் கடம்பர் கோயிலிலிருந்து மேளதாளங்களுடன் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.

அதனை தொடர்ந்து மறுநாள் காலை உற்சவஅம்மனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், மஞ்சள், பழவகைகள், மற்றும் பலவகை வாசைன திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அன்று மாலை 6 மணியளவில் மகாமாரியம்மன் திருவீதி உலா கோயிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலை சென்றடைந்தது. மீண்டும் உற்சவ அம்மன் கடம்பர் கோயிலுக்கு சென்றடைந்தது. இறுதியாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.

× RELATED பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா