×

 பலமணி நேரம் காத்திருக்கும் அவலம் நாகை மாவட்டத்தில் மக்களை வாட்டும் 106 டிகிரி வெயில்

சீர்காழி, ஜூன் 21: நாகை மாவட்டத்தில் சீர்காழி மயிலாடுதுறை கொள்ளிடம் பூம்புகார் தரங்கம்பாடி குத்தாலம் கீழ்வேளூர் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் காலை 11 முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் கடைவீதிகள் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பேருந்துகளில் பொதுமக்கள் குறைவாகவே பயணிக்கின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களையும்,

தண்ணீரையும் அதிகளவில் அருந்தி வருகின்றன. குறிப்பாக குளிர்பான கடைகளில் புதிய கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வெயில் தாக்கம் ஒரு பக்கம் இருக்க மின்வெட்டும் அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள், குழந்தைகள், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் .
நாகை மாவட்டத்தில் வெயிலின் அளவு 106 டிகிரியை தொட்டுள்ளது. அக்கினி நட்சத்திரத்துக்கு பிறகு வெயில் தாக்கம் குறைந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த பொதுமக்களுக்கு தற்போது வீசும் கடுமையான வெயில் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Tags : district ,Nagai ,population ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...