×

வேதாரண்யத்தில் அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்த துணை தாசில்தார்

வேதாரண்யம், ஜூன் 21: வேதாரண்யத்தில் தான் படித்த பள்ளியை மறக்காமல் தனது மகனையும் அரசு தொடக்கப்பள்ளியில் துணை தாசில்தார் சேர்ந்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. வேதாரண்யம் அர்சளை கட்டளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருக்குவளை துணை தாசில்தாராக பணியாற்றுகிறார். இவரது மகன் நன்நெறியாளன் (5). அரசு அதிகாரியாக பதவி உயர்ந்தாலும் தன் பிறந்த ஊரையும், தான் படித்த பள்ளியையும் மறக்காமல் தன் மகனை அரசு பள்ளியான வடமழை ரஸ்தா தொடக்க பள்ளியில் தனது மகனை சேர்த்தார்.

ஏற்றத்தாழ்வு இன்றி அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்த துணை தாசில்தார் ரமேசை அப்பகுதி மக்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரி தாமோதரன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் மற்றும் பெற்றோர் ஆசிர்யர் கழகத்தினர் பாராட்டினார்.

இந்த பள்ளி இவ்வட்டாரத்திலேயே சிறந்த பள்ளியாக விளங்குகிறது. தனியார் பள்ளியுடன் போட்டி போடும் அளவிற்கு இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கணிணி, முதலிய பாடபிரிவுகளுடன் கராத்தே, நடனம் போன்ற படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது. மேலும் குளிர் சாதன வகுப்பறைகளும் உள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் படிக்கின்றனர்.

Tags : Dasildar ,Government school ,Vedaranyam ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...