×

நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று சர்வதேச யோகா தினம்

யோகா என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைத்தல் என்பதாகும். ஆசனம் என்பதற்கு இருக்கை என்று பொருள் படும். யோகாசனம் என்பது மனதை அலை பாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சியாகும். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி சித்தர் யோக சாஸ்திரத்தை கண்டு பிடித்து அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இந்த பெருமை பதஞ்சலி சித்தரையே சேரும். இவர் வகுத்த அஷ்டாங்க யோகம் எட்டு நிலைகளை உள்ளடக்கியது.

இமயம் (தன்னடக்க நிலை), நியமம் (போது மென்ற மனம்/திருப்தி/ எளிமை), ஆசனம் (உடலுக்கு செய்யப்படும் பயிற்சிகள்), பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), பிரத்தியா காரம் (ஐம்புலன்களை அடக்குவது), தாரனை (ஒரே பொருளின் மீது கவனத்தை செலுத்துதல்), தியானம் (மனதை ஒருமுகப்படுத்துவது), சமாதி (உடலை மறந்த நிலையில் இறைவனோடு ஒன்று சேர்தல்). இந்த எட்டு நிலைகளையும் ஒருவர் ஒரே நேரத்தில் எட்டிவிட இயலாது. படிப் படி யாக ஒன்றை அறிந்து, பயின்று அதில் முழுமையடைந்த பின்னர் தான் இன் னொன் றை பயில முடியும். யோகா சனம் செய்வதால் எலும்புகள் பலமடையும். ரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

நோய்களுக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட ஆசனங் களை முறையாக செய்வதால் நன்மை பயக்கும். எல்லா யோகாசன பயிற்சிகளையும் செய்யத் தேவையில்லை. ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதற்கு தகுந்தவாறு எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தனுராசன பயிற்சிகளையும், தைராய்டு குறைபாடு உள்ள வர்கள் மட்சியாசன பயிற்சியையும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு சூரிய நமஸ்கார பயிற்சியையும், மேற்கொண்டால் நலம் தரும்.

இது குறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தெரிவித்திருப்பதாவது: இதுபோன்ற பயிற்சிகளை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் உள்ள சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவரை அணுகி நோய் களுக்கு தகுந்தவாறு பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

யோகா மட்டு மல்லாமல் இயற்கை மருத்துவ சிகிச்சைகளான மண்குளியல், காந்த சிகிச்சை, வாழை இலை குளியல், நீராவிக்குளியல், இடுப்புக் குளியல், அக்குபஞ்சர் போன்ற சிகிச்சைகள் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் ஆயுஸ் மருத்துவ பிரிவுகளில் சிறப்பு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம்.

இத்துடன் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (21ந்தேதி) அனைத்து அரசு இயற்கை யோகா மருத்துவமனைகளில் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி நோயில்லாமல், மருந்தில்லாமல், நீண்ட ஆயுளோடு, மகிழ்ச்சியோடு வாழ உணவை மருந்தாக உட்கொள்ளுவோம். இயற்கை யோகா மருத்துவத்தை நாடுவோம் என்றார்.

Tags : International Yoga Day ,
× RELATED 6-வது சர்வதேச யோகா தினத்தை ஓட்டி...