இரு சக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜூன் 21:  குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டிற்கு நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் பணிபுரியும் மகளிர் எளிதில் பணியிடங்களுக்கு செல்ல இருசக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகனத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான கடைசிநாள் 31.01.2019 என ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது.  தற்போது விண்ணப்பதாரர்களின் வசதிக்காக 20.06.2019 முதல் அம்மா இருசக்கரவாகனத் திட்டத்தின் கீழ் மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 04.07.2019 அன்று மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம்.

எனவே விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 04.07.2019 அன்று மாலை 5 மணி வரை சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

Tags :
× RELATED வெயிலில் பயணிகள் பரிதவிப்பு...