×

அரக்கோணம் அருகே துணிகரம் 7.62 லட்சம் மதிப்புள்ள கோயில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு

வேலூர், ஜூன் 21: அரக்கோணம் அருகே ₹7.62 லட்சம் மதிப்புள்ள கோயில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீது நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி பேரம்பாக்கம் சின்னமண்டல் கிராமத்தை சேர்ந்தவர் முரளி(47). இவர் அரக்கோணம் எஸ்.என்.கண்டிகையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தாமோதரன் என்பவரிடம், மேல்பாக்கத்தில் உள்ள 2 வீட்டுமனைகளை, கடந்த 2015ம் ஆண்டு ₹7.62 லட்சத்திற்கு வாங்கினார். சில மாதங்கள் கழித்து முரளி, இதற்கு பட்டா கேட்டு அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, அவர் வாங்கிய 2 வீட்டுமனைகளும் அரக்கோணம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரியல் எஸ்டேட் அதிபர் தாமோதரனிடம் கேட்டார்.

அப்போது தாமோதரன், அந்த இடத்திற்கு பதிலாக வேறு இடத்தை தருகிறேன். இல்லையென்றால் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாக கூறினாராம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக காலம் கடத்தி வந்ததுடன், பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து முரளி, வேலூர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், டிஎஸ்பி ஜெயசுப்பிரமணியன்(பொறுப்பு), இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர், ரியல் எஸ்டேட் அதிபர் தாமோதரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Real Estate ,
× RELATED பேர்ப்ரோ 2024 வருடாந்திர சொத்து ரியல்...