×

ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் சடலத்தை மீட்டு தரக்கோரி மகன், உறவினர்களுடன் மனைவி மனு

பெரம்பலூர், ஜூன் 21: சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் சடலத்தை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டரிடம் மகன்கள் மற்றும் உறவினருடன் பெண் கோரிக்கை மனு அளித்தார். சேலம் மாவட்டம் கவர்பனை கிராமம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவரது மனைவி ராதா (38) என்பவர் மகன்கள் மற்றும் உறவினர்களுடன் திரண்டு வந்து பெரம்பலூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் எனது கணவர் செந்தில்குமார், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார்.

தொடர்ந்து அங்கு வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதியன்று செந்தில்குமார், சாலையை கடக்கும்போது அவர் ஓட்டி சென்ற லாரியின் டயர் வெடித்து விபத்தில் பலியானதாக அங்கிருந்து எனக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அங்குள்ள அரசின் சார்பாக முறையான தகவல் இன்னும் வந்து சேரவில்லை.

எனவே சவுதி அரேபியாவில் எனது கணவரது நிலையறிந்து உண்மையில் இறந்திருந்தால் அவரது உடலை இந்திய தூதரகத்தின் மூலமாக விரைந்து பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பொது மறுவாழ்வுத்துறை முதன்மை செயலாளர், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கான நல ஆணையருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

கணவரது உடலை இந்திய தூதரகத்தின் மூலமாக விரைந்து பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Tags : Saudi Arabia ,
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...