×

தா.பழூர் அருகே தீவிபத்து கிடங்கில் சேகரித்து வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் சாம்பல்

தா.பழூர், ஜூன் 21: தா.பழூர் அருகே உள்ள கிடங்கில் கடைகளில் பறிமுதல் செய்து சேகரித்து வைத்திருந்த 1,500 டன் பிளாஸ்டிகள் பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதில் ஏற்பட்ட புகைமண்டலத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தா.பழூரிலிருந்து சீனிவாசபுரம் செல்லும் சாலையில் உள்ள சுடுகாடு அருகே கொட்டகை அமைத்து மூட்டைகளாக கட்டி வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வி.கைகாட்டியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு பொருட்களை ஏற்ற லாரி வந்தது. இந்நிலையில் சேமிப்பு கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. சுற்றிலும் வீடுகள் ஏதும் இல்லாத நிலையில் விளைநிலங்கள் பகுதியில் இருப்பதால் தற்போது விவசாயம் இல்லாமல் வெயிலின் தாக்கத்தில் இருந்தவை திடீரென தீப்பற்றியது.

காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து கருகியது. இதில் 1,500 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் எரிந்தது. இதனால் அப்பகுதியே கரும் புகைமண்டலமாக காட்சியளித்தது. தீவிபத்து குறித்து தா.பழூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : fire warehouse ,Thapoor ,
× RELATED 10ம் தேதி தேர்பவனி தா.பழூர் சரகத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்