ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூன்21: பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க த்தின் சார்பாக, அச் சங்கத் தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் என் பவரது படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கொலைக் குற்றவாளிக ளைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும், படுகொலை செய்யப்பட்ட அசோக் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணத் தொ கையினை வழங்கிடவேண் டும்.

60 நாட்களுக்குள் குற் றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமாலை பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டு காந்தி சிலை முன்பு நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பாலகு மார் தலைமை வகித்தார்.இதில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tags : Democracy Youth Association Demonstration ,
× RELATED சித்தமல்லி நீர்தேக்க கரையில் பனை விதைகள் நடவு பணி