×

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற பெரம்பலூர் மாவட்டத்தை ேசர்ந்த வாலிபர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்,ஜூன்21:முதலமைச்ச ரின் மாநில இளைஞர் விருதுபெற தகுதியானவர்கள் வருகிற ஜூலை 2ம்தேக்குள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசு 2014-2015 ம் ஆண்டு சட்டப்பேரவை யில் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சமுதாய வளர்ச் சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண் டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, 2019ம் ஆண்டிற்கான முதல மைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு 15ம்தேதியன்று நடைபெ றும் சுதந்திர தின விழாவில் வழங்கப் படவுள்ளது. இந்த விருதினைப் பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்போர் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம்தேதியன்று, 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் கடந்தா மார்ச் 31ம் தேதியன்று 35 வயதுக்குள்ளாக இரு த்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2018-2019) அதாவது 2018 ஏப்ரல் 1ம் தேதிமுதல் 2019 மார்ச் 31ம்தேதிவரை மேற் கொள்ளப்பட்ட சேவைகள் மட்டு மே பரிசீலிக்கப்படும்.

விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.(அதற்கான சான்று இணை க்கப்பட வேண்டும்). விண்ணப்பதார ர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வ த்துடன் தொண்டா ற்றியிருக்க வேண் டும். அவ்வாறு அவர்கள் செய்தத் தொண்டு, கண்டறியப்படக் கூடியதாக வும், அளவிடக் கூடியதாகவும் இருத் தல் வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களி டம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள மான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் உள்ளது. இணையதளம் மூலம் வருகிற ஜூலைமாதம் 2ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப் பிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : district ,Perambalur ,Chief Minister ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி