×

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

பொள்ளாச்சி, ஜூன் 21:கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் 49வது பிறந்தநாள் விழா பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சுப்பிரமணியசாமி கோயிலில் சிறப்பூ பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  இதற்கு, மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். நகர தலைவர் அருள் முன்னிலை வகித்தார்.  அதுபோல், கிணத்துக்கடவு ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மதுக்கரையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மதுக்கரை அஜீஸ், புவனேஸ்வரி, சிவராஜ், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதைதொடர்ந்து, குறிச்சியில் நடந்த ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவில் மாவட்ட தலைவர் சக்திவேல் கலந்து கொண்டு, கொடியேற்றி வைத்தார். பின், கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முகமது இஸ்மாயில், மதுசூதனன், துரைமோகனசுந்தரம், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rahul Gandhi ,Birthday ,
× RELATED உண்மைக்காக போராடுபவர்களுக்கு எந்த...