தமிழக அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, ஜூன் 21: கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்களின் தாகம் தீர்க்க முடியாத தமிழக அரசின் மெத்தன போக்கையும், முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக தோல்வியை கண்டித்தும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க உடனடியாக ஆக்கப்பூர்வமான போர்க்கால நடவடிக்கையை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தும் வகையில், திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (22ம் தேதி) காலை 10மணியளவில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இதற்கு, முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், எம்பி., சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். இவ்வாறு தென்றல் செல்வராஜ் கூறியுள்ளார்.

Tags : DMK ,Tamil Nadu ,
× RELATED உழவர் திருநாளை மகிழ்ச்சியுடன்...