ஆர்.புதுப்பட்டினத்தில் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை

அறந்தாங்கி,ஜூன் 21: தமிழகத்தில் நிலவிவரும் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் திண்டாட்டம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அன்றாட அத்தியாவசிய தண்ணீர் கூட கிடைக்காமல் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த இன்னல்கள் நீங்க படைத்த இறைவனிடம் மழை வேண்டி கோரிக்கை வைக்கும் சிறப்புப் பிரார்த்தனைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் கிளைகள் வாரியாக செய்துவருகின்றது.

அதன் ஓர் அம்சமாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை (மழைத் தொழுகை) நடத்தப்பட்டது. இந்த மழை சிறப்பு பிராத்தனையை இமாம் நூர் முகம்மது நடத்தி வைத்தார். இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Tags :
× RELATED சாம்பல் புதனுடன் தவக்காலம்...