×

ஊட்டி தேயிலை தோட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட தடுப்பணையை இடிக்க உத்தரவு

ஊட்டி, ஜூன் 21: ஊட்டி அருகே தேவர்சோலை பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டு வரும் தடுப்பணையை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.  நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான மலைகளின் நடுவே நீரோடைகள், அருவிகள், ஆறுகள் ஓடுவது வழக்கம். இந்த தண்ணீர் விவசாயம், குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் உருவாகும் இது போன்ற நீரோடைகள் ஒன்று சேர்ந்து ஆறாக ஓடி, விவசாயத்திற்கு பின் பவானி ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி பவானி படுகை விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டு மின் உற்பத்திக்காகவும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மேலும், தேயிைல தோட்டங்களுக்கு நடுவே ஓடும் ஓடைகள், ஆறுகளை மறித்து தடுப்பணைகள் கட்டி, அதனை பல்வேறு தேவைகளுக்கும், கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்தகின்றனர். இதனால், நீரோடை, ஆறுகளில் தண்ணீர் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீலகிரியில் இருந்து பவானி ஆற்றிற்கு செல்லும் தண்ணீரும் குறைந்து வருகிறது.

 இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த நீரோடையை மறித்து அதன் உரிமையாளர் தடுப்பணை கட்டி வருகிறார். இதனால், தேவர்சோலை, காசோலை போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நீரோடையில் இருந்து பவானி ஆற்றிற்கு தண்ணீர் செல்வது முற்றிலும் குறையும் அபாயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இந்த தடுப்பணையில் படகு சவாரி செய்யவும், தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், இந்த தடுப்பணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. தடுப்பணை கட்ட வேண்டுமென்றால், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சத்திடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், இவர்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை. அதகரட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் வாய்மொழியாக தடுப்பணை கட்டுகிறோம் எனக் கூறிவிட்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.  இந்நிலையில், இது தொடர்பான செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஊட்டி ஆர்டிஓ., விசாரணை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அவர், அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தடுப்பணை கட்ட எவ்வித அனுமதியும் பெறவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதனால், கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த ேநற்று ஆர்டிஓ., சுரேஷ் உத்தரவிட்டார். மேலும், இந்த பகுதி குன்னூர் தாலூகாவிற்குட்பட்ட பகுதியில் வரும் நிலையில், குன்னூர் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் அந்த தடுப்பணையை இடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தற்ேபாது தடுப்பணைைய இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : building ,Ooty Tea Garden ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி