அறந்தாங்கி அருகே கோயில் திருப்பணியின்போது சிவலிங்கம் கண்டெடுப்பு

அறந்தாங்கி, ஜூன் 21: அறந்தாங்கியை அடுத்த செட்டிவயல் பாக்குடி அருகில் கோயில் திருப்பணியின்போது, சிவலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டது. அறந்தாங்கியை அடுத்த செட்டிவயல் பாக்குடி அருகே புராதன சிறப்புமிக்க சிதிலமடைந்த நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவனடியார் திருக்கூட்டத்தினர் முயற்சியால் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த ஆலயத்தில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது, கல்லால் ஆன சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. திருப்பணியின்போது பூமிக்கடியில் சிவலிங்கம் கிடைத்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Shiva Lingam Detectives At Temple Retreat Near Aranthangi ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...