புதுக்குளத்தில் யோகா பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 21: புதுகுளம் நடை பயிற்சியாளர் சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் புதுக்குளத்தில் நேற்று காலையில் இந்திய அரசு யோகா துறையின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள யோகா பயிற்சி அட்டவணையின்படி யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நடை பயிற்சியாளர் சங்க தலைவர் நைனாமுகம்மது தலைமை வகித்தார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு , மாவட்ட யோகா சங்கத் தலைவர் சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். முன்னதாக பார்த்திபன் வரவேற்றார். முடிவில் செல்வரத்தினம் நன்றி கூறினார்.

Tags : Yoga Training Camp ,
× RELATED கொடைக்கானல் பல்கலையில் யோகா பயிற்சி முகாம்