×

தமிழக அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம்

ஊட்டி, ஜூன் 21: ஊட்டியில் வரும் 22ம் தேதி திமுக., சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் திமுக.,வினர் திரளாக கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  திமுக., தலைவர் ஸ்டாலின் கடந்த 19ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் கவனக்குறைவாலும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அக்கறையற்ற தன்மையாலும் தமிழகம் முழுவதிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கண்டித்து வரும் 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வேண்டும் எனவும் தலைைமை கழகம் அறிவித்துள்ளது.

இதன்படி  நீலகிரி மாவட்ட திமுக., சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  22ம் தேதி ஊட்டி ஐந்து லாந்தர் திடலில் காலை 11 மணியளவில் நடைப்பெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தல் நீலகிரி மாவட்டத்திலுள்ள மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், நிர்வகாகிகள், கட்சி முன்னணியினர், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏராளமான பொதுமக்களை அழைத்து வந்து கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றிப்பெற உதவிட அன்புடன் வேண்டுகிறேன். குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணியாற்றிட விருப்பம் தெரிவித்து ஏற்கனவே மாவட்ட கழகத்தில் விண்ணப்பித்திருந்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி செயலாளர்கள் தங்களது பகுதியிலிருந்து ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தோழர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்திடவும் வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் முபாரக் கூறியுள்ளார்.

Tags : DMK ,Tamil Nadu ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...