×

ஞானகுரு தபோவனம் சார்பில் இன்று சிறப்பு யோகா பயிற்சி

ஈரோடு, ஜூன் 21: சர்வதேச யோகா தினத்தையொட்டி ஞானகுரு தபோவனம் சார்பில் இன்று ஈரோட்டில் சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈரோடு சென்னிமலை ரோடு முத்தம்பாளையத்தில் உள்ள ஞானகுரு தபோவனம் சார்பில் இன்று (21ம் தேதி) ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள யாளி ரெசிடன்சியில் சர்வதேச யோக தினத்தையொட்டி தியானத்துடன் கூடிய யோக பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து யோக மைய ஸ்தபாகர் தமிழ் வேல் சுவாமி கூறுகையில்,`இந்த யோக பயிற்சி, வெறும் யோகா மட்டும் அல்லாது தியானத்துடன் இணைந்திட்ட பயிற்சியாகும். இந்த பயிற்சி மேற்கொண்டால் உடல், மனம், ஆரோக்கியம் பெறுவதுடன், ஒழுக்கம், தெய்வீக பண்புகளுடன் வாழ முடியும். குழந்தைகளை இப்பயிற்சி கற்பதன் மூலம் நல்ல நினைவாற்றல், புரியும் தன்மை மேம்படும். எங்களது ஞானகுரு தபோவனத்தில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் காலை 8.30 மணி வரை சிறப்பு யோகா பயிற்சிகள் இலவசமாக நடக்கிறது’ என்றார்.

Tags :
× RELATED ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதியில்...