×

பசியை போக்கி கொள்ளும் கிளிகள் தஞ்சை அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்

தஞ்சை, ஜூன் 21: தஞ்சை அருகே தொழிலாளியின் கூரை வீடு எரிந்து சாம்பலானது. தஞ்சை சேப்பனவரி தெற்கு தெருவை சேர்ந்த தொழிலாளி நாகரத்தினம் (55). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரையில் தீபற்றியது. அந்த தீ மளமளவென பரவி கூரை முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீடு முழுக்க தீப்பிளம்பாக காட்சியளித்தது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

தீ விபத்தில் வீட்டிலிருந்த ரொக்க பணம், நகை, பீரோ, கட்டில் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : roof house ,Tanjore ,
× RELATED கொரோனா பரவல் தடுக்க 4,90,046 கிலோ...