குடிநீர் விற்பனை நிலையம் மூடல் தஞ்சை கோர்ட் பகுதியில் உள்ள தனியார் குடோனில் 4 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தஞ்சை, ஜூன் 21: தஞ்சை கோர்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சை கோர்ட் ரோடு பகுதியில் தனியார் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டதில் 4 டன் அளவிலான அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தற்போது வரை தஞ்சை மாநகராட்சியில் 24 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் உபயோகிக்க பயன்படும். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் பயன்படுத்துபவர்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

Tags :
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...