தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

ஈரோடு, ஜூன் 21: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் 49வது பிறந்தநாள்விழா தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு அருகே திண்டல் பகுதியில் உள்ள கொங்கு மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் நடந்தது.
 நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ.,வும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான பழனிச்சாமி கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கினார். மாணவ, மாணவியர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கொடுமுடி பகுதியில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி வழங்கப்பட்டது. மொடக்குறிச்சி அனுமன் பள்ளியில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. ஊத்துக்குளி, பெருந்துறை பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சென்னிமலை உதயம் மனநலம் குன்றிய பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல், வட்டார தலைவர்கள் கொடுமுடி கோபாலகிருஷ்ணன், மொடக்குறிச்சி முத்துக்குமார், ஊத்துக்குளி வடக்கு சர்வேஸ்வரன், பெருந்துறை தெற்கு ராவுத்குமார், சென்னிமலை சிவக்குமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் தளபதி ரமேஷ், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் வினோத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வாசுதேவன், காளிதாஸ், ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் ரவி, பூவை ராஜன், யோவேல், சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rahul Gandhi ,Birthday ,Southern District ,Congress ,
× RELATED காந்தி பிறந்த மண்ணில் வன்முறைக்கு...