மயங்கி விழுந்து விவசாயி சாவு

கும்பகோணம், ஜூன் 21: கும்பகோணம் அருகே மயங்கி விழுந்து விவசாயி இறந்தார். கும்பகோணம் அடுத்த வேப்பத்தூர் சட்டார தெருவை சேர்ந்த விவசாயி தனசேகர் (48). இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சுதர்சன் (18) என்ற மகன் கல்லுாரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தனது இடம் தொடர்பாக வேப்பத்தூர் விஏஓ அலுவலகத்துக்கு சென்றார். அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகி–்ன்றனர்.

Tags :
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...