×

ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ‘நியூட்ரிஷன் கிட்’

ஈரோடு, ஜூன் 21:ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 20 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ‘நியூட்ரிஷன் கிட்’ வழங்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு நான்கு தவணைகளில் ரூ.18 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ரூ.2000 மதிப்பில் நியூட்ரிஷன் கிட் எனப்படும் சத்து மாவு, பேரிச்சம் பழம், முந்திரி உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்படுகிறது.  அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவோருக்கு நிதி மற்றும் கிட் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதம்தோறும் சராசரியாக 1,000 குழந்தை பிறப்பு, தனியார் மருத்துவமனைகளில் 1,000 குழந்தை பிறப்பு என 2,000 குழந்தைகள் பிறக்கிறது. ஆண்டுக்கு, 24,000 குழந்தைகள் பிறக்கிறது. நடப்பாண்டில் 20 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு `நியூட்ரிஷன் கிட்’ வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறுகையில்,`கர்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் ரூ.18,000 வழங்கப்படுகிறது. இதுதவிர நியூட்ரிஷன் கிட் வழங்கப்படுகிறது. நியூட்ரிஷன் கிட் வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை 20,000 கர்ப்பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : women ,district ,Erode ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...