×

மேட்டூர் அணை திறக்கப்படாததை கண்டித்து ஆற்றை சுடுகாடாக மாற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜூன் 21: ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படாததால் தண்ணீர் வரத்தின்றி ஆறுகள் சுடுகாடாக மாறிவிட்டதாக கூறி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் இறங்கிய விவசாயிகள் அங்கு சுடுகாடு அமைத்து அதில் ஒரு விவசாயியை பாடையில் படுக்க வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து ஈமச்சடங்குகள் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் அணையில் ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியும். இப்போது தண்ணீர் திறக்கப்படாத நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீரை நம்பி பம்ப் செட்கள் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர்களில் மட்டுமே குறுவை சாகுபடி செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பருவமழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் மிக குறைந்த நேரமே வழங்கப்படுகிறது. இதனால் பம்ப் செட் மூலம் குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீரின்றி வேதனையில் உள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து 8ம் ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் ஜூன் 12 ல் மேட்டூர் அணையை திறக்கப்படாததை கண்டித் தும், காவிரி ஆணையம் உத்தரவிட்டும் 9 டிஎம்சி தண்ணீரை காவிரியில் விடுவிக்காத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், கர்நாடகத் திடம் இருந்து காவிரியில் உடன் தண்ணீர் பெற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் வரத்து இல்லாமல் வெண்ணாறு வறண்டு சுடுகாடாக மாறிக்கிடப்ப தாக கூறி கூத்தாநல்லூர் வெண்ணாறு பாலம் அருகில் ஆற்றில் இறங்கிய விவசாயிகள் அங்கு சுடுகாடு கூரை ஒன்றை அமைத்து அதில் ஒரு விவசாயி இறந்து போனதுபோல் பாடையில் படுக்க வைத்தனர். பின்னர் பாடையை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

தொடர்ந்து பாடையில் படுத்திருந்தவருக்கு ஈமச்சடங்குகளை செய்த விவசாயிகள் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுதர்சன், விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் சிவதாஸ், விவசாய சங்க நகர செயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுதர்சன் கூறுகையில்,
கடந்த 2001 ஆண்டு ஜூன் மாதம் 6 நாட்கள் முன்கூட்டி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தாண்டு வரை மேட்டூர் அணை ஜூன் மாதத்தில் திறக்கப்படவில்லை. கடந்தாண்டும் இந்தாண்டும் பருவ மழை பொய்த்தது. காவிரியில் தண்ணீர் திறந்து விட போதிய தண்ணீர் கிடைக்கா மல் குறுவை மட்டுமல்ல சம்பா, தாளடியும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் கர்நாடகம் தமிழகத் திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கினால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

Tags : Mettur Dam ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி