×

நடவடிக்கை எடுக்க ஜமாபந்தியில் விவசாயிகள் புகார் கூத்தாநல்லூரில் பரபரப்பு 10 கிராமங்களில் குடிநீர் விநியோகம்

முத்துப்பேட்டை, ஜூன் 21: முத்துப்பேட்டை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து சொந்த செலவில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கி வரும் திமுக எம்எல்ஏ ஆடலரசனுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு உட்பட கடலோர ஊராட்சி கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்தை நோக்கி பயணித்து வருகிறது. பயனிலிருந்த அடிபம்புகள் செயலிழந்து விட்டன. கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்படும் கொள்ளிடம் குடிநீரும் கடலோர கிராமங்களில் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை.

இது குறித்து முத்துப்பேட்டை பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆடலரசனுக்கு புகார் தெரிவித்து தாங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து தனது சொந்த செலவில் திமுக எம்எல்ஏ ஆடலரசன் மினி லாரிகள் ஏற்பாடு செய்து அதில் டேங்குகள் அமைத்து நேற்று முதல் தொண்டியக்காடு ஊராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் இலவசமாக விநியோகம் செய்து வருகிறார்.

குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் வரை குடிநீர் விநியோகம் இருக்கும். வேறு பகுதியில் எங்காவது குடிநீர் தட்டுப்பாடு இருக்குமெனில் அங்கும் சென்று மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என எம்எல்ஏ ஆடலரசன் தெரிவித்தார். குடிநீருக்காக சிரமப்பட்டு வரும் தங்களின் நிலையை அறிந்து குடிநீர் தந்து தாகம் தீர்த்து வரும் எம்எல்ஏ ஆடலரசனுக்கு கிராம மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Tags : villages ,Koothanallur ,
× RELATED பல ஆண்டுகளாக தூர்வாராததால்...