பல்கலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சி, ஜூன் 21: பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கான இளநிலை மற்றும் முதுநிலையில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான பருவமுறைத் தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
முதுஅறிவியல் கணிதவியல், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பவியல், உயிர் தொழில் நுட்பவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான முதுநிலைத் தேர்வு முடிவுகளும், இளநிலை வணிகவியல் இளம் இலக்கியம், புலவர் பட்டயம், அராபிக், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு முடிவகளும் நேற்று வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை பல்கலை இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவெண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து பிற பாடங்களுக்கும் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன என தேர்வு நெறியாளர் துரையரசன் தெரிவித்துள்ளார்.

Tags : University ,
× RELATED அண்ணா பல்கலை தேர்வு ஒத்திவைப்பு