×

23ம் தேதி தொடங்கி 8 நாட்கள் ரங்கத்தில் சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி 30ல் சீதா கல்யாண மஹோத்சவம்

திருச்சி, ஜூன் 21: ரங்கத்தில் சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி 23ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 30ம் தேதி சீதா கல்யாண மஹோத்சவம் நடக்கிறது. ரங்கம் வடக்கு சித்திரை வீதியில் இந்து சமய மன்றம் சார்பில் வருடந்தோறும் சமஷ்டி உபநயனம் மற்றும் சீதா கல்யாண மஹோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி 42ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் வரும் 23ம் தேதி நடக்கிறது. முன்னதாக 22ம் தேதி மாலை 3 மணிக்கு உதகசாந்தி நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. 24ம் தேதி மற்றும் 25ம் தேதி ஆகிய இரு தினங்கள் வேளுக்குடி கிருஷ்ண சுவாமியின் ஏன்? ஏன்? ஏன்? என்ற தலைப்பில் உபன்யாச நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 27ம் தேதி மதி விசாகா ஹரியின் சிஷ்யை நிதியின் சீதா கல்யான சங்கீத உபன்யாசமும் நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம் 30ம் தேதி காலை 8 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையுடன் துவங்கி, காலை 10.30 மணிக்கு சீதா கல்யாணம் நடைபெற உள்ளது. மாலை 4 மணி முதல் உள்ளூர் பாகவதர்கள் பங்கேற்கும் வசந்த கேளிக்கை நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு சூர்யபிரியா ரெங்கராஜனின் பகவத்கீதை உபன்யாசமும் அதனை தொடர்ந்து பவ்வளிம்பு உத்சவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேய உத்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ரங்கம் வடக்கு சித்திரை வீதி இந்து சமய மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Sita Kalyana Mahotsavam ,Samadhi Upanayanam Concert ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை