×

தண்டவாளத்தில் பராமரிப்பு பணி திருச்சி-காரைக்கால் பாசஞ்சர் ரயில் இன்று ரத்து

திருச்சி, ஜூன் 21: தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் திருச்சி-காரைக்கால் பாசஞ்சர் ரயில் ்இன்று ரத்து செய்யப்படுகிறது.
திருவெறும்பூர்-சோளகம்பட்டி இடையே தண்டவாளங்கள் இடையே பணிகள் நடப்பதால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரைக்காலில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்(76851) இன்று காரைக்காலில் இருந்து தஞ்சை வரை மட்டுமே இயக்கப்படும். இதுபோல திருச்சியில் இருந்து காரைக்கால் வரை இயக்கப்படும் பாசஞ்சர் (76854) இன்று ரத்து செய்யப்படுகிறது. கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி ரயில் இன்று கோவையில் இருந்து 75 நிமிடங்கள் தாமதாக வரும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை அறிவித்துள்ளது.

Tags : Trichy ,passenger train ,Karaikal ,
× RELATED ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து? என தகவல்