மத்திய அரசை கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூன் 21: மத்திய அரசு கல்வியில் பெரும்பான்மை மக்கள் மறுக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்தும், 5 மற்றும் 8ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு, அரசு கல்லூரிக்கு நுழைவு தேர்வு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவதை கண்டித்தும் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் பிரித்திவ் தலைமை வகித்தார். இதில் இவ்வமைப்பினர் கலந்துகொண்டனர்.

Tags : demonstration ,government ,
× RELATED கிருஷ்ணகிரி, ஓசூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்