×

அரும்பாக்கத்தில் துணிகரம் இளம்பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலை

அண்ணாநகர்: அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (23). இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், ஜெயஸ்ரீ வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர், வீட்டில் வேறு எங்காவது பணம், நகை உள்ளதா என பார்த்துக்கொண்டு இருந்தனர். இதனிடையே, கடையில் இருந்து வீடு திரும்பிய ஜெயஸ்ரீ, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்றபோது, அங்கிருந்த மர்ம நபர்கள், ஜெயயை சரமாரியாக தாக்கினர். ஜெயஸ்ரீ கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தார். உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள், 5 சவரன் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Jewel ,
× RELATED அம்மன் கோயிலில் நகைகள் கொள்ளை