ஐம்பொன் சிலை மீட்பு


சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே  உள்ள சர்வதீர்த்த குளம் தற்போது நீரின்றி வறண்டுள்ளது. குளத்தின் ஒரு பகுதியில் சிறுவர்கள் சிலர், நேற்று முன்தினம் விளையாடியபோது, சிலை ஒன்று கிடப்பது தெரிந்தது. தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், சுமார் 1 அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலையை மீட்டனர். விசாரணையில், இந்த சிலை கடந்த ஆண்டு காஞ்சிபுரம் குமரகோட்டம் கோயிலில் இருந்து மாயமான கச்சியப்ப சிவாச்சாரியார் சிலை என்பது தெரிந்தது.

Tags :
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 7 பேருக்கு குண்டாஸ்