×

கீரப்பாக்கம் ஊராட்சியில் கல்குவாரிகளில் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்த டேங்கர் லாரிகள் பறிமுதல்

கூடுவாஞ்சேரி, ஜூன் 21: கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட  கல்குவாரி மற்றும் விவசாய கிணறுகள் உள்ளன. இங்கு திருட்டுத்தனமாக லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஆயில் மோட்டார், ஜெனரேட்டரை பொருத்தி தண்ணீரை எடுத்து வந்தனர். இதுபற்றி பலமுறை புகார் செய்தும், வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என்றும், இதனால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் தவிக்கின்றனர் என கலெக்டரிடம் புகார் செய்தனர். இதையடுத்து, கலெக்டர் பொன்னையா, நேற்று காலை, மேற்கண்ட பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, திருட்டுத்தனமாக தண்ணீர் எடுக்க பயன்படுத்திய லாரிகள், ஆயில் மோட்டார்கள், ஜெனரேட்டர்களை பறிமுதல் செய்து காயார் போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும், இதுபோன்று தண்ணீரை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.

Tags : Kulwari ,
× RELATED உத்திரமேரூர் அருகே பரபரப்பு சம்பவம்...