×

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு, ஜூன் 21: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 49வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு நகர காங்கிரஸ் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் நடந்தது. செங்கல்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகர துணை தலைவர் பார்த்தசாரதி வரவேற்றார்.காஞ்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக, செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோயிலில், ராகுல்காந்தி பெயருக்கு சிறப்பு பூஜை நடத்தினர்.இதில் மாவட்ட பொது செயலாளர் குமரவேல், மாவட்ட நிர்வாகிகள் முருகன், வெங்கடேசன், ராமச்சந்தரின், நகர நிர்வாகிகள் நூர்பாஷா, மணி, உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சாலையில் உள்ள மேற்கு மாவட்ட அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.மேற்கு மாவட்ட தலைவர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் இராம.நீராளன் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கிருபாகரன், பத்மநாபன்,  வட்டார தலைவர்கள் காஞ்சிபுரம் சம்பத், வாலாஜாபாத் சுகுமார், ஊடகப் பிரிவு செயலாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rahul Gandhi ,Birthday ,Chengalpattu ,Kanchipuram ,
× RELATED சொல்லிட்டாங்க...