கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம்

உத்திரமேரூர், ஜூன் 21: உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உத்திரமேரூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ருத்ரகோட்டி, இலக்கிய அணி நிர்வாகி முனிரத்தினம், ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வடிவேல் வரவேற்றார்.

காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், சாலாவக்கம் ஒன்றிய செயலாளர் குமார், விவசாய அணி அமைப்பாளர்கள் சோழனூர் ஏழுமலை, சுப்பையா, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் காளிதாஸ், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மாணவரணி துணை  அமை ப்பாளர் தின கரன் நன்றி கூறினார்.     


Tags : Karunanidhi ,birthday party ,
× RELATED எம்ஜிஆர் பிறந்த நாள் விழா