தண்ணீர் பிரச்னையை தீர்க்க தவறிய அதிமுக அரசை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூன் 21:   திருவள்ளூர் தெற்கு மாவட்ட மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை: குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கைகளில் அதிமுக அரசு உடனடியாக ஈடுபட வலியுறுத்தி நாளை 22ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் எனது தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்து கொண்டு உரை ஆற்றுகிறார். இதில் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இ.பரந்தாமன், சி.ஜெரால்டு, ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிடபக்தன், நடுகுத்தகை ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன், மு.ராஜேந்திரன், ம.ராஜி, ஜெ.ஜெய்மதன், ஜி.ஆர்.திருமலை, கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்கிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு, வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கும்மிடிப்பூண்டி கி.வேணு வெளியிட்ட அறிக்கை:திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி பகுதியில் உள்ள அண்ணா சிலை எதிரே நாளை 22ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தமிழகத்தில்  குடிநீர் பிரச்னையை சரி செய்யாத அதிமுக அரசை கண்டித்து  முன்னாள் அமைச்சர்  க.சுந்தரம்  தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில, மாவட்ட, செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகிகள் முன்னிலை வகிப்பார்கள். இதில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொள்ள வேண்டும்.Tags : DMK ,government ,AIADMK ,
× RELATED ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி