×

வேன் விபத்து 7 பேர் காயம்

பள்ளிப்பட்டு, ஜூன் 21: ஆர்.கே.பேட்டை வெடியங்காடு கிராமத்தில் இருந்து 25க்கும் மேற்பட்டோர்  பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு வேனில் நேற்று புறப்பட்டனர். சித்தூர்-சோளிங்கர் சாலை நாகபூண்டி சென்றபோது எதிரில் வந்த பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பினார். அப்போது வேன் சாலையோர பனை மரத்தில் மீது மோதியது. இதில் ரேவதி (24), வேண்டா (25), ரஞ்சித் (36), ரூபா (21), கைலாஷ் (10), புவனேஸ்வரி (60), சேகர் (55) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.  உடனே கிராம மக்கள் அவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags : van accident ,
× RELATED ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 12 பேர் காயம்