×

9 மாதமாக சம்பளம் கிடைக்காமல் நில எடுப்பு பணியாளர்கள் அவதி

விருதுநகர், ஜூன் 19: சிவகாசி சுற்றுச்சாலை நில எடுப்பு பணியாளர்கள் 9 மாதமாக சம்பளம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சிவகாசியில் சுற்றுச்சாலை அமைப்பதற்காக கீழத்திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, கொங்கலாபுரம், ஆனையூர், ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, திருத்தங்கல் பகுதிகளில் நிலங்கள் கையக்கப்படுத்தப்பட உள்ளன. இதற்கான நில எடுப்பு அலுவலகம், சிவகாசி தாசில்தார் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்தாண்டு ஜூலை மாதம் பணி தொடங்கிய நிலையில் 4 சர்வேயர்கள், 2 கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், 2 அலுவலக உதவியாளர்கள், 4 கள அலுவலர்கள் என சுமார் 12 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஓய்வு பெற்றவர்கள், பட்டதாரிகள், அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாக இருந்தாலும், அரசுப் பணி என்பதால், எப்போதாவது பணி நிரந்தரம் கிடைக்கும் என நம்பி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு அக். மற்றும் செப்டம்பர் மாதங்களில் பணிக்கு சேர்ந்த இவர்களுக்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. கடந்த 9 மாதமாக ஊதியம் இல்லாத நிலையில், குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சிவகாசி சுற்றுச்சாலை நில எடுப்பு அலுலர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க, விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : landlord staff ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி