700 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல் 4 பேர் கைது

விருதுநகர், ஜூன் 19: விருதுநகர் அருகே, அனுமதியின்றி கார் மற்றும் வேனில் கொண்டு வந்த 700 குரோஸ் பட்டாசு திரியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். விருதுநகர் அருகே, கன்னிசேரி கால்நடை மருத்துவமனை எதிரே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த வேனை சோதனை செய்ததில், ‘மேலகட்டனார்பட்டி காளீஸ்வரன் (31), மாரிமுத்து (37) ஆகியோர், அனுமதியின்றி வேனில் 500 குரோஸ் பட்டாசு திரி கொண்டு வந்தது தெரிய வந்தது. வேனை கைப்பற்றிய போலீசார், பட்டாசு திரிகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.இதேபோல, கன்னிசேரி முதல் ஓ.கோவில்பட்டி ரோட்டில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஓ.கோவில்பட்டி முனியராஜ் (23), சத்தியமூர்த்தி ஆகியோர் காரில் 200 குரோஸ் பட்டாசு திரியை அனுமதியின்றி கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர். பட்டாசு திரியை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : crash trio ,
× RELATED காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு...