×

சாத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தொடர் முழக்க போராட்டம்

சாத்தூர், ஜூன் 19: சாத்தூரில் வரி வசூலிப்பதில் காண்பிக்கும் அக்கறையை, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் நகராட்சி நிர்வாகம் காண்பிப்பதில்லை என கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. முக்குராந்தலில் நடந்த போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.மாவட்டக்குழு செயலாளர் அர்ஜூணன், தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில், ‘நகரில் பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். வைப்பாற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
வைப்பாறு புதிய பாலத்தில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிடட் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட செயற்குழு லட்சுமி, மாவட்ட குழு தெய்வானை மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : agitations ,administration ,Sattur ,
× RELATED இந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு