புதுமாப்பிள்ளை தற்கொலை

தேனி, ஜூன் 19: தேனி அருகே புது மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி அருகே சங்ககோனாம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (29). கிரசரில் தொழிலாளியாக பணிபுரிந்த இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலை அன்பழகன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் அன்பழகன் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Newcompai ,suicide ,
× RELATED புழல் சிறை காவலர் குடியிருப்பில் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை