ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்ச்சி

சிவகங்கை, ஜூன் 19: சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை வட்டத்தில் 06.06.2019 அன்று ஜமாபந்தி துவங்கி 18.06.2019ல் நிறைவடைந்துள்ளது. மேற்கண்ட நாட்களில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 57 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 352 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 264 மனுக்கள் வருவாய்த்துறை தொடர்பாகவும், 88 மனுக்கள் பிற துறைகள் தொடர்பாகவும் வழங்கப்பட்டவை. மனுக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஒருவாரத்திற்குள் அனைத்து மனுதாரர்களுக்கும் தீர்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டா பெயர் மாற்றம் மற்றும் பட்டா பாகப்பிரிவினை தொடர்பான மனுதாரர்களுக்கு காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், முதியோர் உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்துள்ள மனுவை அன்றைய தினமே ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து உரிய தீர்வை வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்(நிலஅளவை) யோகராஜா, சிவகங்கை தாசில்தார் கண்ணன், அலுவலர்கள் கண்ணன், முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : event ,
× RELATED நெருக்கடியான சூழ்நிலையிலும்...