×

அரசுப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி ஆசிரியர்களுக்கு தங்கமோதிரம் பரிசு

திருப்புவனம், ஜூன் 19:  கல்லூரணி அரசு பள்ளியில் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதால் ஆசிரியர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. திருப்புவனம் அருகே கல்லூரணியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை  23 மாணவர்கள், 16 மாணவிகள் உட்பட 39 பேர் எழுதினர். 39 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். நூறு சதவீதம் தேர்ச்சி பெற கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் மீனாட்சி மோகன்குமார் முன்னிலை வகித்தார்.   தலைமை ஆசிரியர் உதயகுமார்  வரவேற்றார். முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்குமார் 7 ஆசிரியர்களுக்கும் அரை பவுன் தங்க மோதிரத்தை அணிவித்து கிராமமக்கள் சார்பில் பாராட்டு தெரிவித்தார். விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கினார். தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நூறு சதவீதம் தேர்ச்சியை தரும் ஆசிரியர்களுக்கு முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்குமார் தங்க மோதிரம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.  

Tags :
× RELATED உலக புத்தக தின விழா